திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65-வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக மேயர் வேட்பாளர் அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு சான்றிதழை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி அவரை மேயர் இருக்கையில் அமர வைத்தார்.
அப்போது “இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என அமைச்சர் கே.என்.நேரு கூற அருகிலிருந்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கல கல என சிரித்தனர். அமைச்சர் நேருவின் நிழலான அன்பழகனை மேயராக்கி அழகு பார்த்தார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போதே மேயர் அன்பழகன் தான் சொன்னார். அன்பழகன் ஆசை நிறைவேறியதுடன் சொன்னதை செய்து காட்டியும் மேயர் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments