பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், திமுக மத்திய மண்டல பொறுப்பாளர் வைரமணி, மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments