Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

யார் பணத்தில் திமுக அமைச்சருக்கு 5 கோடி ரூபாயில் கார் – அதிமுக முன்னாள் எம்பி கேள்வி

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என் ஒரு பகுதியாக திருச்சி அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பி மாநகுமார் தலைமையில் மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தன கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ப.குமார்…… மின் வாரியத்தை சீர்திருத்தம் செய்யுங்கள்  – என மத்திய அரசு கூறியதை.. மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமல், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு. அடுத்த ஆட்சி அதிமுக தான்.. நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதியாக உள்ள, விலையே நிர்ணயம் செய்யாத, 5 கோடி ரூபாய் சொகுசு காரில் கே.ன்.நேரு செல்கிறார். அவரது கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டிஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில்? 5 கோடிக்கு கார்.

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்துநிலையம், திருச்சி மாநகராட்சியின்  50 கோடி மக்கள் வரி பணத்தில், 20 கோடிக்கு கிராவல் மண் நிறப்புவதாக டெண்டர் விடப்பட்டதை மறைத்து, திருச்சி குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்களை கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட அடித்தளத்திற்கான மண் நிரப்பப்படுகிறது.

கே.என்.நேருவின் இடங்கள், சொத்துக்கள் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ள இடத்தை சுற்றி உள்ளது. இவை அதிக விலைபோகும் என்ற கணக்கில் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையத்தை கொண்டுவரப் பார்க்கிறார். அவரது சுயநலத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் உடந்தையாக, துணைபோகக் கூடாது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசனுக்கு சேவை செய்யத்தான் நேரம் இருக்கிறது. தனது துறையில் எதையும் ஒழுங்காக செய்யவில்லை. போட்ட உத்தரவுகள் அனைத்தும் ஓரிரு நாட்களிலேயே திரும்ப பெறப்படுகிறது. அதனால் தான் அவரை,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக “உத்தரவு வாபஸ் துறை அமைச்சர்” என்று சமூக வலைதளங்களில் அழைக்கின்றனர் என கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *