Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவர் கைது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் ஒன்லி சிக்கன் ஹோட்டல் அருகே உள்ள ஒரு மாடியில், இருவர் பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருப்பதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் (9487464651) மூலம் இரகசிய தகவலின் கிடைக்கப்பெற்றது.

இதன்அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், மேற்படி பகுதிகளில் மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, மண்ணச்சநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 404/23, U/s 8(c) r/w 20(b)(ii) (A) of NDPS Act- வழக்கின் குற்றவாளியான அரவிந்த் (22) (த.பெ. முருகேசன் (எ) DC U, Rowdy HS No. 14/23, Category -C), குமரவேல் (42). த.பெ. செல்வராஜ், என்பவருடன் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது, எதிரியான அரவிந்த், பட்டாகத்தியை காட்டி காவலர்களை மிரட்டி, உயிர்சேதம் ஏற்படுத்தும் நோக்கில், அவரை பிடிக்க வந்த காவலர் 1609 தமிழழகன், என்பவரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு, பின்னர், தானும் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கீழே குதித்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற போது, போலீஸாரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு, எதிரிகளிடமிருந்து பட்டாக்கத்தி மற்றும் சூரிக்கத்தி ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.

பின்னர் அவர்கள் மீது 405/23, U/s 294(b(332,353, 307, 506(ii) IPC, r/w 25(I-A) of Arms Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *