திருச்சி மாவட்டத்தின் 1500 உறுப்பினர்கள் கொண்டு மாநில சங்கத்தில் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி (2023-2025)ம் ஆண்டு சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று (26-12-2023) சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவராக ஆதி.சரவணன், செயலாளராக D.பாஸ்கர், பொருளாளராக A.ரம்ஜான், மாவட்ட துணைத் தலைவர்களாக N.மகேஷ் மற்றும்

P.ஆனந்த், இணை செயலாளர்களாக L.அருண்குமார், N.பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments