திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் – அரசாணை (நிலை எண் – 15) (30.01.2024) அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாக துறை அமைச்சரை, மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர் முகமது ரபீக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், 29 வது வார்டு தலைவர் கபீர்,

செயலாளர்கள் அப்துல் நாசர், காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் சதாம், உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments