தமிழ்நாடு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன், திருச்சி மாவட்ட கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் VDart குரூப் ஆகியவை இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகளுக்கான தடகளப்போட்டி 23 மற்றும் 24 ஆம் தேதி இரு நாட்களாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

1ம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையிலான. மாணவ- மாணவிகளுக்கான விடார்ட் ( VDart) ரோலிங் டிராபிக்கான தடகளப்போட்டி நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் தலைவர் டாக்டர் சாமுவேல் பால் தேவகுமார், டாக்டர் எஸ்.சரோஜினி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், விடாட் நிறுவனத்தின் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் டெரிக் அலெக்ஸ், ஒருங்கிணைப்பாளர் டி.மனோஜ் மற்றும் கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஆர்.கருணாகரன் ஆகியோர் கூட்டாக தடகள போட்டியை தூங்கி வைத்தார்கள்.


24ஆம் தேதி மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் வி.சுரேஷ் குமார், ஜென்னிஸ் உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.அருள்மொழி, VDart குழுமத்தின் மேலாளர் தரணி சீனிவாசன் ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு VDart சுழல் கோப்பை வழங்கினார்கள். VDart குழுமத்தின் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் டெரிக் அலெக்ஸ் வரவேற்புரையாற்றினார். ஆர்.கருணாகரன் செயலாளர் நன்றியுரையை முன்மொழிந்தார்.

தடகள போட்டியின் முடிவுகள் – 235 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த VDart சாம்பியன் பட்டத்தை ஆர் எஸ் கே மேல்நிலைப்பள்ளி கைலாசபுரம் திருச்சி வெற்றி பெற்றது.
1) மாணவர்களுக்கான போட்டியில் – ஆர் எஸ் கே மேல்நிலைப்பள்ளி, திருச்சி. 117 புள்ளிகளுடன் முதலிடமும், இரண்டாம் இடம் 85 புள்ளிகளுடன் பாய்லர் பிளான்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, திருச்சி வெற்றி பெற்றார்கள் பெற்றனர்.

2) மாணவிகளுக்கான போட்டியில் – 118 புள்ளியுடன் ஆர் எஸ் கே மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 95 புள்ளிகளுடன் பாய்லர் பிளான்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி இரண்டாம் இடம் பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments