திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே மேலரசூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி 60 வயதான ஜோதி் இவர் வீட்டுக்கு தொட்டியம் தாலுகா அரங்கூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான விஜயகாந்த், தெய்வானை (21), பிரியதர்ஷினி (18) ஆகிய மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது நைசாக பேசி மூதாட்டி ஜோதி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கலியை கழட்டித் தருமாறு கூறியுள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் தாலிச் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் தாலிச் சங்கிலியுடன் 3 பேரும் அங்கிருந்து தப்பினர். இதனையடுத்து மூதாட்டி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தெய்வானை பிரியதர்ஷினி ஆகிய இரண்டு இளம் பெண்களை சுற்றி வளைத்து பிடித்து கல்லக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 இச்சம்பவம் குறித்து மூதாட்டி ஜோதி கல்லக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தெய்வானை மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரண்டு இளம் பெண்களை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் தாலிச் சங்கிலியை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 12 April, 2024
 12 April, 2024

Comments