அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 23,24,25 ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்திற்காக திருச்சி வருகை தர உள்ளார்.
அவரை வரவேற்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக வினர் வைத்த பேனர்களை அகற்றிய, காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும், தமிழக அரசின் கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன் உள்ளிட்டோர் போராட்டம்
நடத்தி வருகின்றனர் காவல் நிலையம் முன்னதாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்னதாக பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments