திருச்சிராப்பள்ளி மாவட்டம்,துறையூர் நகரத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பே ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை காப்பதற்கு 108-ஆம்புலன்ஸ் அவ்வழியாக சென்றபோது அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் 108-வாகனத்தை கைகளால் குத்தியும், தட்டியும்,
ஓட்டுனரை தாக்குவதற்கு முற்பட்டு அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் ஆத்திரமானார்கள். நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் அதிமுக பொதுச் செயலாளர் பரப்புரை செய்யும் கூட்டத்திற்குள் புகுந்ததால் தொண்டர்கள் ஆவேசம் அடைந்து மாற்று வழியில் செல்ல வேண்டியது தானே என குரல் எழுப்பி திருப்பி அனுப்பினர் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை கூட்டத்திற்குள் விடுவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
முன்னதாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின் கதவை திறந்து உள்ளே நோயாளிகள் யாரும் இல்லை. வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வாகனத்தை உள்ளே வரவைத்துள்ளனர் என்பதை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments