திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (06.09.2025) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி தம்பதியர்களின் மகள்
12 வயது கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையொட்டி இன்று அவருடைய இல்லம் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிதியுதவி அளித்தார்.
உடன் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் பகுதிச் செயலாளர் திரு. ஆர்.ஜி.பாபு, வட்டக் கழகச் செயலாளர் மனோகர் மாமன்ற உறுப்பினர் மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, பிரபாகரன், (JE) புஷ்பராணி, மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments