காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமதித்து பேசியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து, திருச்சியில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் உருவ படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தைக்கொண்டு அடித்து, காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து முழக்கமிட்டனர். பின்னர், செல்வப்பெருந்தகையின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்த முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகவினரை, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றம் வழியாக அழைத்து சென்றனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர், அதிமுகவினர் மீதும் போலீசார் வாகனம் மீதும் கல் வீசி தாக்கினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments