தீபாவளி என்றாலே மதுப்பிரியர்களின் பார்ட்டி இல்லாமல் இருக்காது.அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை,மதுரை, சேலம் திருச்சி என டாஸ்மாக் விற்பனைக்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் 1045 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தமிழ்நாட்டில் விற்பனையில் மூன்றாவது இடத்தை விற்பனையில் பிடித்து திருச்சி மண்டலம் சாதனை புரிந்துள்ளது.

திருச்சி மண்டலத்தில் 157 கோடியே 31 லட்சம் ரூபாய் டாஸ்மாக்கில் மது விற்பனையாகியுள்ளது. மதுரையில் 170 கோடியும், சென்னையில் 158 கோடியும்
மது விற்பனையாகி உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் மது விற்பனை இலக்கு ரூ580 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு 790 கோடி ரூபாய்க்கு சரக்கு கடையில் கல்லா கட்டியுள்ளனர். எதில் சாதனை புரிகிறோமோ இல்லையோ திருச்சி மண்டலம் மது விற்பனையில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments