கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் 05.12.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகம் அருகில் இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 10:00 மணி அளவில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி பேருந்து நிலையம் அருகிலும்.
காலை 11:00 மணியளவில், மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை பேருந்து நிலையம் அருகிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.
அது சமயம் கழகத்தின் செயல்வீரர்களும், வீராங்கனைகளும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாமல் பங்கேற்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கழகத்தினர் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் ப.குமார் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments