காங்கிரசின் மூத்த முன்னோடி தியாகி டி.எஸ்.அருணாச்சலம் அவர்களின் 116 -வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் திருச்சி சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் திருச்சி வேலுசாமி, ஜெரோம் ஆரோக்கியராஜ், திலகர், மேயர் அன்பழகன், கோட்ட தலைவர் மதிவாணன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மதிமுக மாவட்ட தலைவர் வெல்லமண்டி சோமு, மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்துச்செல்வம், சேர்மன் துரைராஜ், சிறுபான்மை துணை அமைப்பாளர் பா. தஸ்தகீர், பொருளாளர் முரளி, டி.ராகவேந்திரன், உறந்தை செல்வம், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, உறையூர் பாக்கியராஜ்,
அரியமங்கலம் அழகர், மார்க்கெட் பகதுர்ஷா, கிளமெண்ட், மும்தாஜ், விஜி, ஆரிஃப்,ரபிக், நல்லசேகர், கண்ணன், சண்முகம், அன்பு ஆறுமுகம், சர்புதீன், தம்பா, அன்பழகன், பேங்க் முருகேசன், மணியன், கருணாகரன், முகுந்தன், விஷ்ணு, பிரபு, பாலசுப்பிரமணியம், செல்வம், குத்தூஸ், ஜெகதீஸ்வரி, நல்லேந்திரன், மெய்யநாதன்எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments