விவசாயிகள் சங்க தலைவர் P. R. பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது

போடப்படும் வழக்கு அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அண்ணாமலை நகர், திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் தமரோ பர்னிச்சர் முன்பு தொடர் காத்திருப்பு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments