கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர விவசாய தொழிலாளர் அணி சார்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் விவசாய தொழிலாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வரவேற்புரை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சி.ராஜேந்திரன்
தலைமை மாவட்ட அமைப்பாளர் மாவட்ட அணி அமைப்பாளர் ஆ.ஜெகதீசன் மாநகர அணி அமைப்பாளர் கோவி நாகராஜன்
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் விவசாயிகளுக்கு வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மண்டலக்குழு தலைவர்
மு. மதிவாணன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் இரா.மூக்கன்
நன்றியுரை மாநகர மாநகரத் தலைவர் நா.வேல்முருகன்
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாவட்ட மாநகர விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளர்கள் கந்தசாமி, ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தகுமார், ராஜா, சுதாகர், தேவராஜன் காதர் மைதீன், சுப்பையா, வெங்கட், நூர்முகமது,
சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி,
மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் வட்டக் கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது
இன்று நாம் யாருக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றோம் என்று சொன்னால் சனாதனம் குறித்து ஒரு கருத்தைச் சொன்னபோது இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் உடனடியாக சொன்ன கருத்தை திரும்ப பெற வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து நீதிமன்றங்களும் சொன்னபோது
ஒரு இளம் சிங்கமாக கலைஞரின்
பேர பிள்ளையாக ஒரு வீர பிள்ளையாக நான் கலைஞருடைய பேரன் என் மீது எந்த தவறும் இல்லை நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் மாட்டேன் என்று சொன்னவர் உதயநிதி ஸ்டாலின் அவருக்குத்தான் இன்று நாம் பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு கிராமப் பகுதியில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் ஏதோ ஒரு விதத்தில் வேலை செய்கின்ற திட்டம் 100 நாள் வேலைத்திட்டம் நம்மால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு ஒரு நிதியை ஒதுக்கி ஒன்றிய அரசின் மூலமாக ஒதுக்கப்படுகின்ற நிதி மகாத்மா காந்தியின் பெயரில் ஊரக வளர்ச்சி என்கின்ற திட்டம் இத்திட்டம் நூறு நாள் வேலைத்திட்டமாக உருவாக்கப்படுகின்றது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படிப்படியாக பணியாற்றக்கூடிய தாய்மார்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப் போகின்றோம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 27 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பிய அரசுதான்
இந்த மோடி அரசு நாங்கள் எல்லாத்தையும் டிஜிட்டல் மையமாக மாற்றம் செய்கின்றோம் என்று 100 நாள் வேலைத்திட்ட பணத்தை முழுமையாக தராமல் அண்ணல் காந்தியின் உடைய பெயரை நீக்கியதோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் திட்டத்தை சிதைக்க கூடிய பணியை ஒன்றிய அரசில் உள்ளவர்கள் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments