Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

லால்குடி அரசு மருத்துவமனைக்கு 3 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய AID INDIA அமைப்பினர்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் உதவும் மனப்பான்மையும் பலரும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

அந்தவகையில் திருச்சி AID INDIA அமைப்பினர் சார்பாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு 3 லட்சம் மதிப்பிலான 4 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த அமைப்பினர் சார்பாக மருத்துவமனையின் மருத்துவர்களிடம் இந்த மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அந்தநல்லூர் பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி மற்றும் AID INDIA அமைப்பினர் சார்பாக கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *