Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

வயலூர் அருகே பட்டப்பகல் தாக்குதல்: குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என விளக்கம்

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வாசன் வேலி 26 வது கிராஸில் தன் மனைவியுடன் வசித்து வரும் ரகுநாதன் (வயது 67) என்பவரின் வீட்டிற்குள் (04.02.2026) சுமார் 01:00 மணியளவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தரிகோலால் வீட்டில் இருந்த ரகுநாதனை முகம் மற்றும் தோள்பட்டையில் தாக்கியுள்ளதாகவும், இதில் ரத்த காயமடைந்த ரகுநாதன் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் தாக்குதல் நடத்திய நபரை வீட்டிற்குள்ளேயே வைத்து பிடித்து வைத்திருப்பதாக சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற சோமரசம்பேட்டை காவல்துறையினர் ரகுநாதனின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர் கடலூர் மாவட்டம், சிதம்பரம், லால்பேட்டை தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 21) த/பெ சிவக்குமார் என்பதும், ஹரிஹரன் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2025 ஆண்டு மே மாதம் முதல் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மேலும், ஹரிஹரன் மற்றும் அவரது அப்பா, அம்மா மூவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன் ஹரிஹரனுக்கு மனநல பாதிப்பு அதிகம் உள்ளதால் குளித்தலையில் உள்ள தர்காவில் மந்திரித்து கயிறு கட்டிவிட்டு செல்வதற்காக சோமரசம்பேட்டை, வயலூர் ரோடு, ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது தாய்மாமா வீட்டில் மூன்று நாட்களாக தங்கி இருந்துள்ளனர்.

மேற்படி, சம்பவம் நடந்த நாளான 04.02.2026 அன்று தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக சென்ற ஹரிஹரன், அவர் தங்கி இருந்த வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள ரகுநாதனின் வீட்டை தான் தங்கி இருந்த வீடு நினைத்து வீட்டிற்குள் நுழைந்து தனது அம்மா, அப்பாவை தேடி உள்ளார்.

இதையடுத்து, தனது வீட்டிற்குள் வந்த ஹரிஹரனை பார்த்த ரகுநாதனின் மனைவி தடுத்து நிறுத்த முற்பட்டபோது, முடியாமல் போக வீட்டிற்குள் நுழைந்த ஹரிஹரனை ரகுநாதன் திருடன் என்று பிடித்து கூச்சலிட்டுள்ளார். மனநல பாதிப்பில் உள்ள ஹரிஹரன் தன்னை யாரோ தனது வீட்டிற்குள் இருந்து தாக்க முற்படுகின்றனர் என்று வீட்டிற்குள் இருந்த சிறிய ரக கத்தரிக்கோலை எடுத்து ரகுநாதனை முகம் மற்றும் தோள்பட்டையில் குத்தியதில் ரகுநாதனுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஹரிஹரனை திருடன் என்று பிடித்து வைத்து சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசம்பேட்டை காவல்துறையினர் ரத்த காயங்களுடன் இருந்த ரகுநாதனை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி, சம்பவம் தொடர்பாக ரகுநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு (Cr.No.56/26 U/s 296(b), 329(4), 115(2), 118(1), 351(3) BNS r/w 4 of TNPHW Act) செய்யப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் மனநல பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *