தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் திருச்சி மாவட்டத்திலுள்ள 401 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
651 தொகுப்புகளுக்கும் இவ்விளையாட்டு உபகரணங்கள் 30 பொருட்களை உள்ளடக்கியதாகும்) வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 401 நகராட்சி அமைப்புகளுக்கும் இதனை தொடர்ந்து கடலூர், கரூர், நாமக்கல், இராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
மேலும், இவ்விளையாட்டுப் பொருட்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், ஆடுகளம் (TNSPORTS) மொபைல் செயலி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டு தற்போது Google Play Store- இல் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்செயலியின் மூலம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் இருப்பு நிலை (Stock). விநியோகம், பயன்பாடு மற்றும் தினசரி புதுப்பிப்புகளை ஆன்லைனில் கண்காணித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாப்பாக உள்நுழைந்து செயல்படுத்தும் வகையில் வடிமைக்கப்படுள்ளது.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மாவட்ட ஆட்சியர் சரவணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மேகநாதன்ரெட்டி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட துறை அதிகாரிகள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய உரை
திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டு துறை மேம்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் என நினைப்பவர்கள் இங்கு உள்ள இரண்டு விளையாட்டு வீரர்களை பார்த்தால் சாதனை செய்வார்கள்.
கடந்த மாதம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய அளவில் பால்பேட்மிட்டன் போட்டியை துவக்கி வைத்தேன், ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தேன்.
திருச்சி மாவட்ட சுற்றியுள்ள 10 மாவட்டத்திற்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்க உள்ளோம்.
மணிகண்டன் நம்முடைய SDAT மாணவன் என்பது நமக்கு கூடுதல் பெருமை அவருடைய அனுபவம் குறித்து இங்கு நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதேபோல் விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கின்ற இருவரும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள நிறைய பிரதீப்சங்கரும், மணிகண்டனும் உருவாக வேண்டும் என்பதுதான் அரசின் ஒரே நோக்கம்.
திராவிட மாடல் அரசின் விளையாட்டுப் போட்டிகளை நேரில் பார்க்கின்ற கடந்து அதன் பங்கேற்கின்ற இடத்தில் வந்துள்ளது.
நகரங்கள் மட்டுமில்லாத கிராமங்களில் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். அதற்கான வசதிகள் உருவாக்க வேண்டும் என அரசு நிறைவேற்றி கொண்டு வருகிறது.
நகரப் பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டு கொள்ள வேண்டும் என வருடம் தோறும் முதல் அமைச்சர் கோப்பையும் போட்டிகளையும் நடத்தி வருகின்றோம். இன்று வழங்கப்படுகின்ற ஸ்போர்ட்ஸ் கிட்டு மூலம் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிய முடியும்.
அரசு சிறந்த பயிற்சியாளர்களை வழங்குகிறது. உயரிய ஊக்கத் தொகையும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் மூலமாக தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் உருவாகும் என்பது நிச்சயம். நமது திராவிட மாடல் அரசு என்பது இந்த வருடம் 141மினி ஸ்டேடியம் கட்டப்பட்டு சாதனை படைத்துள்ளது.
முந்தைய பத்தாண்டு
அதிமுக ஆட்சியில் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்புக்கு 380 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் திராவிட அரசு விளையாட்டு கட்டமைப்புக்கு 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை முதலமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார்.அடுத்து ஓராண்டில் விளையாட்டு வீரர்களுக்கு 150 அரசு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் பக்கம் போகும்போது பெற்றோருக்கு வருத்தம் இருக்கும் வேலைவாய்ப்பு இருக்காது என்று யோசிப்பார்கள் அதையும் நமது திராவிடம் அரசு சரி செய்து கடந்த வருடம் 100விளையாட்டு வீரர்களுக்கு அரசில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து ஒரு வருடத்தில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர்கள் திட்டமிட்டுள்ளார்.
தொழில் வளர்ச்சி, கல்வி, சுகாதார விளையாட்டு தமிழ்நாடு ஆல்ரவுண்ட் மாநிலமாக மாறி உள்ளது. நமது அரசு முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து அங்கீகாரம் குவிந்து வருகிறது. இந்த வளர்ச்சி மேலும் மேலும் அதற்கு உங்களுடைய ஆதரவு அரசுக்கும், முதலமைச்சருக்கும் தேவை.
இந்த கிட்டுகள் வாங்கும் விளையாட்டு வீரர்களுக்கு முறையாக பயன்படுங்கள் பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்துங்கள் இந்த கிட்டை பயன்படுத்தி உங்கள் ஊர்களில் இருந்து நிறைய வீரர்கள் உருவாக எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments