எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அவர்கள் அங்கே திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்; அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 அன்று தேவையான NOC உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தொடர்புடைய நடைமுறைகளை மேற்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை தேவராஜ் வேலு அவர்களின் உடல் சென்னை விமானநிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முறையாக நடைபெற்றன.
இந்த துயரமான நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் S.K. கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் திரு. V.K. மதியழகன், ராஜ்குமார், முத்துவேல், பாண்டி,
ஆறுமுகம் மற்றும் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, மறைந்த தேவராஜ் வேலு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த தேவராஜ் வேலு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments