திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த T. உடையாபட்டி இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் தலைமை அந்தோனிசாமி ஊர் முக்கியஸ்தர் வகித்தார் ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றது. இதில் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். காளைகளும் வீரர்களை தூக்கி வீசி வெற்றி பெற்று வருகின்றது.
வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. போட்டியில் 800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments