திருச்சி 52வது வார்டு பீம நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மாநகராட்சி மேயர் அன்பழகன் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு புறப்படும் பொழுது
திருச்சி பீமநகர் கடந்த நான்கு ஆண்டுகளாக இடிக்கப்பட்டு தரைமட்டமாக கிடைக்கும் ஹவுசிங் போர்டு குடியிருப்ப இதே இடத்தில் கட்டி தர கோரிக்கை, கொட்டக்குள தெரு ஹவுசிங் போர்டு பகுதியாக இருந்த
இந்த பகுதியில் 86 குடியிருப்பு இருந்ததாகவும் , அதனை இடித்து நான்காண்டுகளாக மாற்று வீடு வழங்காமல் நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது , வாடகை கட்ட முடியவில்லை என்றும் அதிக சிரமப்படும் எங்களுக்கு இதே இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் என அமைச்சரிடம் முறையிட்டனர்.
அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருக்கும் பொழுது டிரம்ஸ் ஒலி அளவை குறைக்க சொல்லி அமைச்சர் பொதுமக்களிடம் பேசினார் பின்னர் சிறிது கொண்டு அவர்களிடம் செய்து தருகிறேன் என்று குறிப்பிட்டு ஆட்சியரிடம் இதற்கு தீர்வு காண அங்கிருந்து இருந்து நைசாக பேசி நழுவி சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments