Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி NIT-யில் பிப். 19 முதல் ‘பிரக்யான்’ தொழில்நுட்பக் கண்காட்சி: 60 நாட்டு மாணவர்கள் பங்கேற்பு!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT) இயக்குநர் அகிலா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT), வரும் பிப் 19 ஆம் தேதி முதல் பிப் 22 ஆம் தேதி வரை ‘பிரக்யான்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளின் கண்காட்சியும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு இடையிலான போட்டிகளும் என்.ஐ.டி மாணவர்களால் நடத்தப்படவுள்ளன.

சர்வதேச அளவிலான ‘பிரக்யான்’ நிகழ்வுகளை, நெய்வேலி நிலக்கரி கழகத்தின் (NLC) மேலாண்மை இயக்குநரும், தலைவருமான பிரசன்னக்குமார் தொடங்கிவைக்கவுள்ளார். இதில், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப மாணவர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

அடுத்த 200 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இயங்கப்போகிறது? என்பதை யூகிக்கும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தாண்டு நடத்தப்படும் ‘பிரக்யான்’ நிகழ்வுக்கு, ‘ANACHRONIA’ என ‘கரு’ உருவாக்கப்பட்டுள்ளது.

‘பிரக்யான்’ தொழில்நுட்பக் கண்காட்சியில், அனைத்து பள்ளிக்கல்லூரி மாணவர்களும் தங்களது கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தலாம்.

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் வகையிலான கண்காட்சியிலும், மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புக்களை தேர்வு செய்வதற்கான போட்டியிலும், வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த ‘பிரக்யான்’ நிகழ்வை அனைத்துத்தரப்பு மாணவர்களும் வந்துப் பார்த்து, தங்களது கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தி, பயனடையவேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *