திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த தெத்தூர் அருகே உள்ள மான் மாஞ்சான்பட்டி குடியிருப்பு அருகே சுமார் 15 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது .இதனைக் கண்ட வீட்டில் உரிமையாளர் பொன்னன் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிப்பான் உதவியுடன் சிறிது நேரம்

போராட்டத்திற்கு பின்பு லாவகமாக மலைப்பாம்பினை பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று மலை பாம்பினை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments