Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி: திமுக–காங்கிரஸ் கூட்டணி உடையாது நம்பிக்கை

திருச்சி தஞ்சை சர்வீஸ் சாலை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் நேரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தான் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை மத்திய மாநில அரசுகள் உடனடியாக விரைந்து சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும்.

இந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டியது மிகப்பெரிய தேவையாக உள்ளது.

மாநிலங்கள் தேர்தல் தேதி தற்போது அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறது அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை

காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறது அதில் எந்தவித குழப்பமும் இல்லை என்று நேற்று அழுத்தமாக கே சி வேணுகோபால் கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்டுக்கோப்புடன் தேர்தலை சந்திக்கும்..

மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல.

இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் மது கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைக்க வேண்டும் தொடர்ந்து மூட வேண்டும் என்ற அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது.

ஆளும் அரசுக்கு இதனை நினைவூட்டுகிறேன் இளைய தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும் தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் மது மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் முழுவதுமாக ஒலிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

நாங்கள் ஒரு கூட்டணி உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம் அதில் எந்தவித பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்று பொறுப்போடு நாங்கள் இருக்கிறோம்.

இந்தியா கூட்டணியினுடைய தலைவராக ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பதை மணிசங்கர் அய்யர் கூறியதை நான் வழிமொழிகிறேன்…

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே போக வேண்டும் என்று ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்..

தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்படக்கூடிய சலசலப்பு அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு உரிமை இருக்கிறது அதனால் கூட்டணி உடைந்து விடாது.

கட்டாயமாக திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.

அனைத்தும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் இதனால் கூட்டணி உடையாது..

எங்களோட நிலைப்பாடு பேரை காங்கிரஸ் ஓட நிலைப்பாடு என்பது வேறு எங்களைப் போன்றே அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நாங்க சொல்ல முடியாது..

இந்த கூட்டணி எங்களுக்கான தொகுதியை உரிமையோடு கேட்போம்..

பிரச்சனை இல்லாத கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான்.. அனைத்தும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *