அரசாணை (நிலை) எண்.344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை, நாள் 05.12.2025-ன் படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 கிராம ஊராட்சிகளில் 04 கிராம ஊராட்சிகளை பிரித்து 08 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டு, அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 11.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசு கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சென்னை அவர்களின் கடிதம் எண். 12876280 / ப.ரா.2(1)/2026–6,நாள்: 05.02.2026-ன் படி வழங்கப்பட்ட அனுமதியின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடாக (எண்.5 நாள்: 05.02.2026) பின்வரும் விவரப்படி இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்டு,
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி (Census) மேற்கொள்ளும் நோக்கத்திற்காக சமுதாய வளர்ச்சி வட்டங்கள் (CD Blocks), ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட அதிகார வரம்பு மாற்றங்கள் 31.12.2025 முதல் நடைமுறைக்கு வரும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கின்றார்.
பிரிக்கப்பட்ட பின்னர் கிராம ஊராட்சிகளின் முழு விபரங்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments