நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு வரும் 21 ஆம் தேதி திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நடைபெறுகிறது அந்த மாநாட்டுத் திடலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திருச்சியில் மாநாடு வரும் 21 ஆம் தேதி மாநாடு நடத்திகிறோம். மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டோம்.
எங்கள் ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான செயல்முறையை தான் வெளியிடவோம்.
வணங்குவதற்கு ஆயிரம் கடவுள் இருக்கிறார்கள் வாழ்வதற்கு இந்த ஒரு பூமி உள்ளது இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடு இருக்கப்போகிறது.. அன்றைய தினம் 234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். படையை வழி நடத்தி செல்பவர்களும் களத்தில் தான் இருக்க வேண்டும். எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது குறித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் எந்த எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம்..
மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும்..
இடைக்கால பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட் ஆக உள்ளது.
இந்த ஆட்சி முறையை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி என்பது கடன் வளர்ச்சியாக உள்ளது. ஆசிரிய பெருமக்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். இதேபோன்று பலரும் போராடி வருகிறார்கள். இலவச வழங்கும் அரசு குவாட்டர் சிகரெட் இலவசமாக வழங்குமா? பின்னர் ஏன் விவசாயிகள் விளைவிக்கும் அரிசியை ஏன் இலவசமாக வழங்குகிறது அரசு ?
விவசாயி உழைப்பு கொச்சைப்படுத்தப்படுகிறது.
அதே போன்ற நெசவாளர் உழைப்பு கொச்சைப்படுத்தப்படுகிறது.
ஐயாயிரம் பணம் தரும் அரசு அரசு ஊழியர்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை என கூறுவது கொடுமையாக பார்க்கிறேன்.
தமிழ்நாடு அரசு வாங்கிய கடனுக்கு வட்டியை ஒரு லட்சம் கோடிக்கு மேல் கட்டி கொண்டு இருக்கிறோம்.
இலவசங்கள் என கூறிவிட்டு மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான மின்சாரம் சொத்து உள்ளிட்டவற்றில் வரியை உயர்த்துகிறார்கள். எங்களுக்கு ஆயிரம் கொடு 500 கோடி என யார் கேட்டது. தொடர்ச்சியாக கடன் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாடு பொருளாதார அடிமையாக மாறிவிடும்.
தமிழ்நாட்டில் யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாறவில்லை விரும்பி தான் மதம் மாறி உள்ளார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி மாற்ற முடியாது.
மதம் மொழி வழிபாடு கல்வி தேர்வு உள்ளிட்டவை அவரவர் விருப்பப்பட்டது இதில் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அதற்காகத்தான் சுதந்திரம் போராடி பெறப்பட்டுள்ளது அதில் யாரும் தலையிடக்கூடாது. தமிழ்நாட்டில் ஜாதியை இழிவு தீண்டாமை கொடுமை உள்ளிட்டவற்றால் தான் பலரும் மதம் மாறி உள்ளார்கள். இன்றும் ஜாதியை இழிவு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தான் உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை செய்தார்கள் நூறாண்டுகளாக அங்கு ஏற்றப்படவில்லை தற்பொழுது அங்கு விளக்கு ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள் தேர்தல் காகத்தான் அதை செய்தார்கள்.
அரசு நினைத்திருந்தால் ஒரு நொடியில் அந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை உங்களுடன் தான் கூட்டணி வைக்கிறோம்.
ஸ்டாலின் தொடரட்டும் நாடு சுடுகாடாக மாறாட்டும். கொஞ்சம் தான் கருத்து சுதந்திரம் உள்ளது. கருத்து சுதந்திரம் என்பதை வெறும் சொல்லாக தான் வைத்துள்ளார்கள். குளித்தலையில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது, வருந்தத்தக்கது.
பொங்கலுக்கு பணம் கொடுப்பது, 5000 பணம் கொடுப்பதை மது கடைகள் மூலமாக தான் அரசு எடுக்கும். பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதை பார்க்கும் போது பதட்டமாக உள்ளது. இதையெல்லாம் தகர்க்கவே நாங்கள் போராடிகிறோம்.
இந்தியா கூட்டணியில் ஏதோ பிரச்சினை இருப்பதால் தான் அவர்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறி கொண்டு இருக்கிறார்கள். அந்த கூட்டணி வலிமையாக இருந்து என்ன ஆக போகிறது.
இந்தியா கூட்டணியில் வலுவாக இருப்பது ஸ்டாலின் தான். அவர் வெளியியேறி விட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் தான் இருக்கும் அதனால் தான் மணிசங்கர் ஐயர் ஸ்டாலினை தலைமை தாங்க அழைக்கிறார்.
ஜனநாயக நாட்டில் போராடுவது மக்கள் உரிமை அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் போராடவாவது உரிமை கொடுத்தார்கள் ஆனால் சுதந்திர நாட்டில் அதற்கு கூட உரிமை இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் மனைவியையே காவல் துறை தாக்கியிருப்பது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன. இது கொடுங்கோன்மை தான் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments