திருச்சி மாவட்டம் சேத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி அஞ்சம்மாள் 48. அதே பகுதியில் சேர்ந்த சின்னசாமி மனைவி முத்துக்கண்ணு 38 இருவரும் இன்று காலை துவரங்குறிச்சியில் இருந்து சேத்துப்பட்டிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை அஞ்சம்மாள் ஓட்டிச் சென்ற நிலையில் அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் முத்துக்கண்ணு.
இருசக்கர வாகனம் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அஞ்சம்மாள் அணிந்திருந்த தலைக்கவசம் காற்றின் வேகத்தில் நகரவே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதியதில் அஞ்சம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்த முத்துக்கண்ணுவிற்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையிலேயே கவிழ்ந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments