Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கில் விஜய் – ஆரவாரத்தில் தொண்டர்கள்

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த அளவு அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி திருச்சி இருதயபுரத்தை சேர்ந்தவர். மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தன்னுடைய மக்கள் சந்திப்பின் முதல் பரப்புரையை திருச்சி கிழக்கு தொகுதி மரக்கடை பகுதியில் இருந்து ஆரம்பித்தார்.

அனைத்து அரசியல் கட்சியினரும் சென்டிமென்ட்டாக கூறுவது திருச்சி திருப்புமுனையை தங்களுக்கு ஏற்படுத்தும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசியலில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் முக்கிய பங்காற்றி மாற்றத்தை உருவாக்கும் இடத்தில் உள்ளதாக என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் கிழக்குத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதி சென்னையில் இருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கிழக்கு தொகுதிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாத நிலையில் அனைத்து நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பதவிகள் உரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

த.வெ.க தலைவர் விஜயின் உடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றவர்கள் இரண்டு நாள் முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியை ஆய்வு செய்துள்ளனர். தற்பொழுது திருச்சி கிழக்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. திருச்சியில் விஜய் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகும் முன் இந்த தகவலால் மிகப்பெரிய உற்சாகத்தை தமிழக வெற்றிக்காக தொண்டர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது என தவெக நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கனவே திருச்சி மாவட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்று நட்சத்திர தொகுதி மட்டுமல்லாமல் முதல்வரின் மாவட்டமாகவே திருச்சி மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று தொடர்ந்து தகவல்கள் வரும் நிலையில் அதில் ஒன்று திருச்சி கிழக்கு என்பது தற்போது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *