Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் நடமாட்டம் – பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை சுமார் 3 மணி அளவில் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபரின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரண்டு குளிர்சாதன இயந்திரங்கள் உள்ள காப்பர் கம்பிகள் வெட்டி திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் அதே நபர் குடியிருப்புக்குள் நுழைந்த காட்சியை கவனித்த குடியிருப்பு வாசிகள், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

திருவரங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *