Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலவச மின் இணைப்புக்கு ₹3,000 லஞ்சம் கேட்ட இளம் பொறியாளர் கைது – துறையூர் அருகே சம்பவம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவரது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார் தாட்கோ மூலம் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது அவருக்கு மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால் கடந்த 27ம் தேதி செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின்வாரிய இளம் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்து இலவச மின் இணைப்பு வழங்க கேட்டுள்ளார் அப்போது 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக இளம் பொறியாளர் தெரிவித்தார் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு புகார் செய்தார் அவரது புகார் படி வழக்கு பதிவு செய்த போலீசார் கொடுத்து அனுப்பிய பணத்தை துறையூர் மின் அலுவலகத்தில் வைத்து இள மின் பொறியாளரிடம் முத்து கொடுத்துள்ளார் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *