Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காமராஜர் நூலகப் பணிகள் தீவிரம்: ஓரிரு மாதங்களில் திறக்கப்படும்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (21.3.2025) அன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

காவிரிக்கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த அறிவுசார் மையத்தின் கட்டிடப் பணிகள் நிறைவடைந்து உட்பகுதிகளில் குளிர்சாதன வசதிகள் பொருத்துதல், தீயணைப்பு கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொண்டு ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் திருமதி.அன்பரசி (கட்டிடங்கள்), திரு.கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *