Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அகனி சிறகே – சர்வதேச பெண்கள் தின விழா

திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம், ஐடியல் ஃபவுண்டேஷன் மற்றும் JCI ராக்டவுன் ஆகிய அமைப்புகள் இணைந்து “அகனி சிறகே” என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தின விழா மற்றும் Women’s Icon Award Ceremony 07.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் திருமதி V. Porkodi, B.A., D.El.Ed., அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பெண்கள் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார். மேலும் அவர் இயப்பா நகர் நூலக வாசகர் வட்டத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் சமூகப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலர் Er. G. ராஜசேகரன் மற்றும் இயக்குநர் Dr. G. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் சாதனைகளை பாராட்டி உரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கத் தலைவர் Lion Dr. M. அனுசுயா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக Jc. Dr. S. முத்துக்குமார், Jc. K. மோகன்ராஜ் மற்றும் Lion Dr. M. அனுசுயா ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு Women’s Icon Award வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக Jc. Dr. S. முத்துக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக இந்திரா கணேசன் கல்விக்குழுமத்தைச் சேர்ந்த மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி,யது விருந்தினர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *