Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து.பிரசன்ன பாலாஜிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய அறிவியல் கண்காணிப்பு மையத்தின் சார்பில் கடந்த 20 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தலைசிறந்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அறிவியல் கண்காணிப்பு மையத்தின் சார்பாக கோயம்புத்தூரில் உள்ள நஞ்சுண்டாபுரம் த க்ளப் ஹவுஸில் 7.3.2026அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்களுக்கு, உடற்கல்வியியல் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்துதல், தொடர்ச்சியாகத் துறை சார்ந்த வெற்றியாளர்களை உருவாக்குதல் ஆகிய துறை சார்ந்த சாதனைகளைப் போற்றும் வண்ணம் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கினார். புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எஸ்.

ராமசாமி, திருச்செங்கோடு கே. எஸ் .ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் ரங்கசாமி, பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ராஜவேல், அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியின் பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர், அமெரிக்க தொராசி அறுவை சிகிச்சை சங்கத்தின் வெளியீட்டு இயக்குநர் மினு டிக்கட், புகழ்பெற்ற பாதுகாப்பு நிபுனர் டி .விஜயகுமார், வரலாற்று ஆசிரியர் சீதாராமன் ஆகிய பிற அறிஞர்களுக்கும் இந்த ஆண்டிற்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்திய அறிவியல் கண்காணிப்பு மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டி .கே .வி இராஜன் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். பார்சன் அப்பெக்ஸ் முன்னாள் தலைவர் முருகன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *