Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விலை உயர்வு: திருச்சியில் பிரதமர் மோடிக்கு எதிராக மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து, திருச்சி இ பி ரோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி அஞ்சு முன்னிலையில் எரிவாயு சிலிண்டர்களை ரோட்டில் வைத்து கண்டனஉரையாற்றினர்.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கும் மத்திய அரசு, அதானி அம்பானி கடனை தள்ளுபடி செய்து இந்திய மக்களை வஞ்சிக்கும் பிரதமர் மோடி பதவி விளக்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, ஷீலா செலஸ், கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஜோசப் இருதயராஜ், எஸ் ஆர் ஆறுமுகம், செந்தமிழ்செல்வன், கிளமெண்ட், ரஃபிக், சித்ரா, விஜயலக்ஷ்மி, சோபியா, வளன் ரோஸ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *