Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 177 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 34,639 மாணவர்கள் எழுதுகின்றனர்

தேர்வுக்கான பாடத்திட்டங்களை முழுமையாக படித்துள்ளதால் தேர்வு சிறப்பாக அமையும் என பொதுத்தேர்வு எழுத சொல்லும் மாணவிகள் நம்பிக்கை

திருச்சி மாவட்டத்தில் 177 மையங்களில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

திருச்சி மத்திய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 95 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்…

முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 177 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சுமார் 449 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் என 34 ஆயிரத்து 639 மாணவ – மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்காக சொல்வதை எழுதும் 720 ஆசிரியர்களும். 231 பறக்கும் படை உறுப்பினர்களும்
20653 அரை கண்காணிப்பாளர்களும்,

பொதுத்தேர்வு பணியில் 173 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 173 துறை அலுவலர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 20 பேருக்கு ஒரு தேர்வு அறை கண்காணிப்பாளர், மற்றும் 350 பேர் கொண்ட பறக்கும் படை என சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *