Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள இரண்டு பங்குகள் மூடல்- ஒரு பங்கில் கூட்டம் அலைமோதல்

திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் கண்ட்டோன்மெண்ட் பகுதிகளில் உள்ள மூன்று பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் பொதுமக்கள் அதிகளவில் நிரப்பி தீர்த்து விட்டனர். நாளை காலை மீண்டும் பெட்ரோல் டீசல் கிடைக்கும் என பங்க் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முக்கியமாக திருச்சி மாநகராட்சி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் மத்திய பேருந்து நிலையம் உள்ள ஒரு பங்கும் விநியோகம் செய்ய முடியாமல் மூடப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ மஹால் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் எல்பிஜி கேஸ் இருப்பதால்

பொதுமக்களின் கூட்டம் ஆட்டோ டிரைவர்களின் கூட்டமும் அதிகரித்து உள்ளது. நீண்ட வரிசையில் பாலத்தை சுற்றி ஆட்டோக்கள் நிற்பது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் பெட்ரோல் டீசல் உள்ளதாக பெட்ரோல் டீசல் கேஸ் எல்லாமே இருக்கு மக்கள் அதிக அளவில் எரிபொருளை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். அதையும் தாண்டி பொதுமக்கள் பயத்தில் பெட்ரோல் டீசல் விலை கார் இருசக்கர வாகனங்கள் நிரப்பியும் கைகள் வாங்கி செல்லும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது. திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலத்தின் கீழே உள்ள பங்கு 24 மணி நேரம் செயல்படும் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்புகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *