உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, திருமதி. B. பால நாகதேவி, இ.கா.ப., அவர்கள், காவல்துறை இயக்குநர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் திரு. ரூபேஷ்குமார் மீனா, இ.கா.ப அவர்கள், காவல்துறை தலைவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆகியோர்கள் உத்தரவிட்டதின் பேரில், திரு. R. ஸ்ரீனிவாசப் பெருமாள், த.கா.ப., காவல் கண்காணிப்பாளர், காவல்துறை தலைவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அவர்களின் மேற்பார்வையில், திரு. B. சிவக்குமார் அவர்கள், காவல் துணை

கண்காணிப்பாளர் கு.பொ.வ.கு.பு. துறை, மதுரை சரகம் மற்றும் திரு. P.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், கு.பொ.வ.கு.பு துறை மதுரை அலகு ஆகியோர்கள் தலைமையில், மதுரை கு.பொ.வ.கு.பு துறை காவலர்கள் சகிதம் கடந்த 11.02.2026-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி (46/26), த/பெ மாயன் என்பவரின் வீட்டின் அருகே அமைந்துள்ள காலியிடத்தில், தீவிர சோதனை மேற்கொண்டதில் அவ்விடத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 209 சிலிண்டர்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக அதே கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27/26), த/பெ விஜயகுமார் என்பரின் வீட்டருகே சோதனை செய்தபோது அவ்விடத்திலும் சட்டவிரோதமாக பதுக்கி

வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 189 சிலிண்டர்கள் என ஆக மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி இரு சம்பவங்களுக்கும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, மேற்படி இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேலும், தற்போதைய சூழலில் LPG சிலிண்டர்களுக்கான தடையற்ற விநியோகத்தைக் கருத்தில் கொண்டும், மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் அவர்கள் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியோர்களின் அறிவுரைப்படி, காவல் கண்காணிப்பாளர், கு. பொ.வ.கு.பு துறை மதுரை மண்டலம் அவர்களின் பரிந்துரையின் பேரில்,

திரு. K.J. பிரவின்குமார், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை மாவட்டம் அவர்கள், மேற்படி பழனி மற்றும் மதன்குமார் ஆகிய இருவரையும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில், மேற்படி இருவரும் மதுரை மத்திய சிறைச்சாலையில் இன்று 12.03.2026ஆம் தேதி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். மானிய விலை சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் ஆட்சியரால் நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மானிய விலை சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டலம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments