Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூரில் எம்.எல்.ஏ மீது தேர்தல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு மண்ணச்சநல்லூர் தொகுதியில் விதிமுறை மீறல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தனது தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்களுக்கு “Mahindra Scorpio N” எனும் உயர்நிலை சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுக்குளம் கணேசன், ராமச்சந்திரன், செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட ஒன்றிய கழக செயலாளர்களுக்கும், ராஜசேகரன் மற்றும் மனோகரன் உள்ளிட்ட பேரூர் கழக செயலாளர்களுக்கும் இந்த கார்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பரிசளிப்பு சம்பவத்தை எம்.எல்.ஏ எஸ்.கதிரவன் தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, எம்.எல்.ஏ எஸ்.கதிரவன் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *