தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் ஏற்கனவே 21-3-2026 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மாவட்டங்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டு, 23-3-2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறது.

இதன்படி, மார்ச் 23 திங்கள் காலை 9.00 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும்; அதே நாள் மார்ச் 23 திங்கள் மாலை 4.00 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும். இத்தகவலை “அண்ணா அறிவாலயம்”, சென்னை – 18 என்ற முகவரியிலிருந்து 19-03-2026 அன்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments