Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திய நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 33 பேர் ஒப்படைக்க 40 மணி நேரம் தூங்காமல் பயணம் செய்யும் காவல்துறை

சேலம் ஆத்தூர் சிறப்பு அகதிகள் முகாமில் பங்களாதேஷை சேர்ந்த 33 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் பல்வேறு வழக்குகளில் மற்றும் முறையான ஆவணம் இல்லாமல் இந்தியாவில் இருந்ததால் அவர்களை திருச்சி ரயில் நிலையத்தில் ஹவுரா ரயிலில் பாதுகாப்பிற்காக தனியாக ஒரு ரயில் பெட்டி முன்பதிவு செய்து 43க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மேற்கு வங்கத்தில் கொண்டு விட்டு அங்கிருந்து பங்களாதேஷ் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதில் 25 ஆண்களும் நான்கு பெண்களும் நான்கு குழந்தைகளும் ஆக மொத்தம் 33 பேர் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

43 காவல் துறையினருடன் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அமர்ந்து கொண்டு 40 மணி நேரம் தூங்காமல் பாதுகாப்பாக அவர்களை கொண்டு விட வேண்டும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் அவர்கள் மேற்குவங்கம் செல்வார்கள் பல்வேறு வழக்குகளில் அத்துமீறி இந்தியாவில் தமிழ்நாட்டில் குடியேறி இருந்தவர்களை அவர்கள் நாட்டில் கொண்டு செல்ல விடும் பொழுது பாதுகாப்பாக தனியாக குறைந்தபட்சம் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொடுத்தால் இருபுறமும் கதவுகளை கூட்டி காவல் துறையினரும் பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியும் என தெரிவித்தனர்.

மேலும் இவர்களை பாதுகாப்பாக மேற்குவங்கம் கொண்டு சேர்த்து ஒப்படைக்கும் வரை இவர்கள் அனைவரின் பாதுகாப்பிற்கு இந்த காவல்துறையினர் குழு தான் பொறுப்பு ஆகவே தூக்கத்தை தொலைத்து உடலை வருத்தி 40 மணி நேரம் பயணம் மேற்கொண்டு இவர்கள் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *