தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்டவைகளை விரைவில் இறுதி செய்து அறிவிக்க உள்ளன. திருச்சி மாவட்டத்தில் கடந்த முறை திமுக 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த முறை திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதி மட்டும் கூட்டணிக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவரம்பூர், மணப்பாறை, லால்குடி,முசிறி மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 9 தொகுதிகளில் திமுக வசம் 8ம் ஒன்று கூட்டணி கட்சியிடம் உள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கில் மீண்டும் இனிக்கோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பணிகளை துவங்கி விட்டார் தமிழக முதல்வர் தேர்தல் வேலையை பாருங்கள் என கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி மேற்கில் மீண்டும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதி மீண்டும் பழனியாண்டிக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற இழுபறியில் உள்ளது. புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
திருவெறும்பூர் தொகுதியை பொறுத்த அளவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் போட்டியிடுகிறார். மணப்பாறையில் இந்த முறை திமுக களம் காண உள்ளது. லால்குடியிலும் திமுக மண்ணச்சநல்லூரில் கதிரவனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.
முசிரி தொகுதியை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஆகவே அதனை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது திமுக தலைமை.
துறையூரில் திமுக போட்டியிடுகிறது மொத்தம் ஒன்பது தொகுதிகளில் எட்டு தொகுதி திமுகவும் முசிறி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாக திமுக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments