திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் (Booth Agents) ஆலோசனைக் கூட்டம், வி என் நகரில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகம் அருகில் நடைபெற்றது.
தலைமை மற்றும் முன்னிலை
இக்கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி, தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்.
கதிரவன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்.
பகுதி கழகச் செயலாளர்கள்:
மோகன் ராஜ்முஹம்மத், விஜயகுமார், பாபு, மணிவேல்.
கூட்டத்தின் நோக்கம்
எதிர்வரும் தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வது, கழக அரசின் சாதனைகளை இல்லங்கள்

தோறும் எடுத்துக் கூறுவது தேர்தல் நாளன்று விழிப்புணர்வோடு இருந்து தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் செயல்பட வேண்டுமென பாக முகவர்கள் தீவிரமாகப் பணியாற்றுவது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஏராளமான பாக முகவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments