Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் சிட்டிங் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏகளுக்கும் கல்தா

திருச்சி திமுகவின் கோட்டை என தொடர்ந்து நிரூபித்து வரும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த முறை ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு அமைச்சர்கள் நேரு, மகேஸ் மீண்டும் இருவரும் தங்களுடைய தொகுதியில் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுகவிற்கு இந்திரா கணேசன் கல்லூரி ராஜா போட்டியிடுகின்றனர். மிக முக்கியமாக திருச்சி கிழக்கை தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடப் போகிறார் என தொடர்ந்து நிர்வாகிகள் ரகசியமான பணிகளை மேற்கொண்டு உற்சாகத்தில் உள்ளனர்.

திருச்சி மேற்கில் அமைச்சர் நேரு அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ராஜசேகர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரை தமிழக வெற்றி கழகம் களம் இறக்க தயாராக வைத்துள்ளது. திருவரம்பூரில் அமைச்சர் மகேஸ் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விஜி ஆகியோர் போட்டியிட உள்ளனர். மணப்பாறை பொறுத்த அளவு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விசுவாசி மருத்துவர் விஜயகுமாரருக்கு சீட்டு உறுதியாகி உள்ளது. அவர் ஏற்கனவே தொகுதியில் பணிகளை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

முன்பே பணிகளை துவக்கி 2 கோடி ரூபாய் வரை அவர் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வில் இழுபறியில் உள்ளது. ஏற்கனவே இருக்கும் சிட்டிங் எம்எல்ஏவிற்கு சீட்டுக் கொடுப்பதில் தொடர்ந்து போட்டி நிலவுகிறது. அமைச்சரின் ஆதரவாளரான துரைராஜ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தை மீண்டும் களம் இறக்கலாம் என திமுக யோசித்து வருகிறது. அதிமுக சார்பாக முன்னாள் கொறடா மனோகர் களமிறங்கி பணிகளை துவக்கி விட்டார். துறையூரை பொறுத்த அளவு மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ ஸ்டாலின் குமாருக்கு சீட் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முசிறியை பொறுத்த அளவு தற்போதைய எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லையாம்.

அந்த தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. அதிமுகவை பொறுத்த அளவு மேட்டுப்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் யோகானந்துக்கு சீட் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் சிவபதி தனக்கு சீட்டு கிடைக்காத பட்சத்தில் இவருக்கு சிபாரிசு செய்வதாகவும் ஒரு தகவல் உள்ளது.

அடுத்ததாக மண்ணச்சநல்லூரில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ கதிரவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவில் பரஞ்சோதி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர் ஆக இருக்கும் இவருக்கு சீட்டு கிடைப்பதில் போட்டியும் ஏற்பட்டுள்ளது பாராளுமன்ற தேர்தலில் நின்ற சந்திரமோகன் மீண்டும் மண்ணச்சநல்லூர் தொகுதியை கேட்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்களுக்கு திருச்சியில் கல்தா கொடுக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியில் இல்லை இதையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த இரண்டு தொகுதிகளிலும் அதே நிலைமை வரும் என ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை திமுக தலைவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லால்குடி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சௌந்தர பாண்டியனுக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அவர் கூறிவரும் நிலையில் ஆனால் தலைமையில் அமைச்சரின் வாரிசு விசுவாசி கவியரசன் என்பவருக்கு சீட்டுக் கொடுக்கப் போவதாக பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது. லால்குடியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் தனது சீட்டை பொதுசெயலரிடம் உறுதி செய்து அனைத்து கட்சியினரையும் ஸ்கெட்ச் போட்டு அதிமுகவுக்கு எதிராக வேலை செய்ய விடாமல் அனைத்து அரசியல் தந்திர வேலைகளையும் செய்து வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட வலுவான ஒரு வேட்பாளர் வேண்டும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ இன்று நாளையோ வேட்பாளர்கள் பட்டியல் திமுக அண்ணா திமுகவில் வெளியாகும் யார் யாருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுத்து அதிர்ஷ்டம் அளிக்க போகிறதோ யார் யாருக்கெல்லாம் துரதிஷ்டம் ஏற்பட போகிறதோ என்று பதப்பதப்பில் வேட்பாளர்களும் கட்சி தொண்டர்களும் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *