Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அட்டவணையானது கீழ்கண்டுள்ளவாறு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிக்கை நாள் 30.03.2026 (திங்கட்கிழமை), வேட்புமனு தாக்கல் செய்திட கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை), வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் நாள் 07.04.2026 (செவ்வாய்கிழமை), வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் 09.04.2026 (வியாழக்கிழமை), தேர்தல் நடைபெறும் நாள் 23.04.2026 (வியாழக்கிழமை), வாக்கு எண்ணும் நாள் 04.05.2026 (திங்கட்கிழமை).

திருச்சிராப்பள்ளி
மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நேர்வில், வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன் மொழிபவர்களில் ஒருவர் கீழ்கண்டுள்ள அலுவலகங்களில் (அரசாங்க விடுமுறையில்லாத) ஒரு தினத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆம் தேதிக்குப் பிற்படாமல் வேட்புமனுக்களை கீழ்கண்டுள்ள அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.

மேலும் 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இயலாது. மேற்சொன்ன இடத்திலும் நேரத்திலும் வேட்புமனுக்கள் கிடைக்கும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது 100 மீட்டருக்குள் 3 வாகனங்களும், வேட்பாளரோடு சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *