Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணடைந்த ஊழியருக்கு இழப்பீடு வழங்குகொ-ஏஐடியுசி

நேற்று (26.3.26) திருச்சியில் கூடிய தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பி.எல். ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர்கள் ஆர்.ஆறுமுகம், எஸ். சின்னசாமி,மாநில நிர்வாக குழு உறுப்பினர் திருச்சி க.சுரேஷ் கோயமுத்தூர் செல்வராஜ், டாக்டர் சாந்தி, மீனாள் சேதுராமன், சங்கையா, தருமபுரி மணி, அரியலூர் தண்டபாணி, மதுரை முருகன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தேனி மாவட்டம், கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு வளைவில் உள்ள படங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மணிகண்டன் 16.3.26 அன்று கீழே விழுந்து மரணமடைந்தார். 13 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த அவருக்கு 36 வயது. நடைபெற்ற மரணத்திற்கு நகராட்சி ஆணையாளரே பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 25 லட்ச ரூபாய் தர வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்று திருச்சியில் கூடிய தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சம்மேளனம்

கேட்டுக்கொண்டுள்ளது,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசாணை 62 ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை கறாக வழங்க வேண்டும்.
வெளிச்சந்தை முறை, ஒப்பந்தமுறை, சுயஉதவி குழு போன்ற பெயர்களில் நிலவும் எல்லாவித ஒப்பந்தமுறைகளையும் நீக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளே நேரடியாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி சுரண்டலை தடுக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதியின்படி கொரோனா கால ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.


உள்ளாட்சி நிர்வாகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யத் தடை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
மக்கள் தொகை, பரப்பளவு, சேகரமாகும் குப்பைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளாட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பணி இடங்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக கூட்டம் துவங்கியவுடன் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி தீர்மானம் இயற்றப்பட்டது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *