2026-தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 (பொன்மலை கோட்டம்) அலுவலகத்தில் வாக்காளர் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை வாருங்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டடு தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் துணை ஆணையர்கள் கே. பாலு, ஆர். வினோத், வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர் எம். கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments