Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்கள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியில் திமுக கிழக்கு சிட்டிங் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், மேற்கு அமைச்சர் கே என் நேரு, திருவரம்பூர் அமைச்சர் மகேஸ், மணப்பாறை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் அப்துல் சமத் உதயசூரியனில் போட்டியிடுவார் என கட்சியை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி நிகழ்கிறது. தொடர்ந்து சிட்டிங் எம்எல்ஏ பழனியாண்டி தனக்கு சீட்டு வேண்டுமென்ற தீவிர முயற்சியில் தலைமையுடன் போராடி வருகிறார்.

கூட்டணி கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கப்பட்ட தொகுதி துறையூர். முசிறி தொகுதியில் முன்னாள் அமைச்சர் மறைந்த செல்வராஜ் அவர்களின் மகன் கருணை ராஜா திமுக சார்பில் போட்டியிடப் போவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மண்ணச்சநல்லூரின் தற்போது எம்எல்ஏ கதிரவன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

லால்குடி பொறுத்த அளவு சௌந்தர பாண்டியனுக்கு தான் சீட்டு என திமுக நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதில் மாற்றம் இருந்தால் திமுக அங்கே வெற்றி பெறுவது கடினம் என திமுக தொண்டர்களே குறிப்பிடுகின்றனர். ஒட்டு மொத்தத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் எட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக அதன் கூட்டணி கட்சிக்கும் ஒன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *