Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் விஜய் வேட்பு மனு – பரப்புரை

தவெக தலைவர் விஜய் திருச்சியில்
வரும் 2 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பரப்புரை மேற்கொள்கிறார்.இதற்கான அனுமதி கோரி செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே அவர் மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில் வரும் 2 ம் தேதி திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.இதற்காக 2ம் தேதி காலை திருச்சி வரும் விஜய்,
திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு 2 அலுவலகத்தில் மனு தாக்கல் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாலக்கரை, மரக்கடை, கே.கே. நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக அனுமதி கோரி செங்கோட்டையன் மற்றும் திருச்சி டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் காமினி இடம் அனுமதி கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.
அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை ஆணையர் மாலை தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *